மதுபோதையில் நபரொருவரின் காதைக்கடித்ததாக இளைஞர் கைது!

arrest_1மது அருந்தும்போது வாய்க்கு ருசியாக பலரும் பல்வேறான நொறுக்கு தீனிகளை உட்கொள்வதுண்டு. ஆனால் போதையிலிருந்த இளைஞன்…
மதுபோதையில் நபரொருவரின் காதைக்கடித்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்.நாவாந்துறை பகுதியில் 7 பேரைக் கொண்ட குழுவினருக்கிடையி;ல் அண்மையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போதே போதையிலிருந்த இளைஞன் ஒருவர் மற்றொரு இளைஞரின் காதை கடித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞனை யாழ்.சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ்.நீதவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் யாழ்.சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts