மதுபோதையில் கொலை செய்த நபர் கைது!!!

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் ஆண் ஒருவர் மீது பெட்ரோல் ஊத்தி தீயிட்டதில் அவர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துடன் தீயிட்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது

இதில் கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே உயிரிழந்துள்ளார்

விநாயகபுரம் ஒன்பதாம் குறிச்சி வீதியில் மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை அடுத்து 37 வயதுடைய ரஞ்சன் என்பவர் நாகன் சாமியன் என்பவரை தாக்கி பெட்ரோல் ஊற்றி தீயிட்டுள்ளார்.

சம்பவதினமான நேற்று மாலை இவர் தப்பியோடியதையடுத்து மக்கள் மடக்கி பிடித்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் கைது செய்துள்ளனர்

மது போதையில் ஏற்பட்ட வாய்த்தக்கத்தில் போத்தலால் குத்தியதுடன் பெட்ரோலும் ஊற்றி கொலை செய்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts