மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாகத் தடை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய குற்றச்சாட்டில் சாரதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சாரதியின் , சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாக தடை செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன் 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத சிறை தண்டனையும் குற்றவாளிக்கு விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்