நாட்டிலுள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரியவித்துள்ளது.
மது ஒழிப்பினை தனது தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதிகளை வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பியரிற்கு விலை குறைப்பினைச் செய்திருந்தது.
இந்நிலையில், தற்போது மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.