மதுபான வரிகளை மீண்டும் அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூலம் இறக்குமதி மதுபானம் மீது குறைக்கப்பட்ட வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

5%க்கு குறைவான அற்ககோல் கலந்துள்ள இறக்குமதி மதுபானத்திற்கான வரி இம்முறை வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்டிருந்தது.

அதன்படி மதுபான இறக்குமதியின் போது நிலவிய வரி சமத்துவமின்மையை தவிர்ப்பதற்காக, அற்ககோல் குறைந்த ஒரு லீற்றர் மதுபானத்திற்கு விதிக்கப்பட்டு வந்த வரி 190 ரூபாவில் இருந்து 160 ரூபாவாக குறைக்கப்பட்டது.

இதன்காரணமாக அற்ககோல் குறைந்த மதுபானம் ஊக்குவிக்கப்படுவதாக அமையும் என்பதனால் அதன் மீதான வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Posts