நண்பர்களுடன் அயல்வீட்டு மதிலில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயதான சிறுவன் மீது மதில் வீழ்ந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் குணால் சங்கீதன் என்ற சிறுவனனே உயிரிழந்தவராவார்.
ஏற்கனவே வெடித்திருந்த மதிலில் நண்பர்களுடன் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மதில் சிறுவனுக்கு மேலே விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனை உடனடியாகவே அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிறுவனைக் கொண்டு சென்றபோது அவர் வைத்தியசாலைக்க கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.