மண்திட்டு சரிந்ததில் 4 இராணுவத்தினர் பலி

அம்பேபுஸ்ஸ சிங்ஹ படைப்பிரிவு தலைமையகத்தில் மண்வெட்டிக்கொண்டிருந்த படையினர் மீது மண்திட்டு சரிந்துவிழுந்ததில் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர்.

மண்திட்டு சரிந்து விழும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் 13 இராணுவத்தினர் இருந்ததாகவும் அதில் ஒருவர் காயமடைந்து, வறக்காபொலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதையுண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts