மண்ணைக் கவ்வியது இலங்கை ! டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசம்

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

New Zealand, with the series trophy

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கெமில்டன் நகரில் கடந்த 18ம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை 292 ஓட்டங்களைப் பெற்ற வேளை, சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து 237 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி 55 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

எனினும் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வரிசையாக வௌியேற, 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து 189 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த நியூஸிலாந்து, இன்றைய நான்காம் நாளில், ஐந்து விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியுள்ளது.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-0 என நியூஸிலாந்து வசமாகியுள்ளது.

Related Posts