மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

1954ஆம் ஆண்டு கட்டப்பட்ட மண்டைதீவு வைத்தியசாலை தனது சேவையினை செய்து வந்தநிலையில் கடந்த கால யுத்தத்தினால் சேதமடைந்திருந்து. மீண்டும் 60 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாண சபையின் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts