மண்டைதீவில் அமையவுள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கு

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர்.

அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் என இரு இடங்களிலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கு நிர்மாணப்பணிகளுக்கும் தலா 100 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது

Related Posts