மண்டேலாவிற்கு யாழ். பல்கலையில் அஞ்சலி

jaffna-universityதென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நெல்சன் மண்டேலாவின் உருவப்படம் பல்கலைக்கழக முன்றலிலுள்ள இராமநாதன் சிலையிலிருந்து மாணவர்களினால் ஊர்வலமாக கைலாசபதி கலையரங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டது.

பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள நினைவுத் தூபியில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இ.இராஜகுமாரன் தலைமையில் நினைவுப் பேருரையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts