மண்சரிவுப் பாதிப்புகளிலிருந்து மீள இலங்கைக்கு உதவுகிறது ஐ.நா.

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளன என ஐ.நாவின்மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.

Stéphane-Dujarric-un

இலங்கையில் இடம்பெற்ற மணிசரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். 300 இற்கும் மேற்பட்டவர்கள் காணமல்போயுள்ளனர். அத்துடன் எனவும், 150 வீடுகள் தரைமட்டமாகின என்றும் தேசிய இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது.

இந்த பாதிப்புக்களில் இருந்து இலங்கை மீள்வதற்கு ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் இலங்ககைக்கு உதவ தயாராகவுள்ளது. இதற்காக அரசாங்கத்தை ஐ.நா தொடர்பு கொண்டுள்ளது. இதேசமயம் இலங்கை செஞ்சிலுவை சங்கம் தனது முதலுதவி குழுக்களை தயார்படுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனமும் தயார் நிலையிலுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts