பதுளை கொஸ்லந்தை மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது.
வரவு -செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோதராதலிங்கம் இந்த அஞ்சலியைச் செலுத்தினார்.
“கொஸ்லந்தையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு கூட்டமைப்பின் சார்பாக அஞ்சலி செலுத்துகின்றேன். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சோகமயமாகக் காட்சிதரும் பிரதேசத்துக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் சிலர் இந்தச் சம்பவம் குறித்து கவலை வெளியிட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினருக்கு அனுதா பங்களையும் தெரிவித்துக்கொண்டனர்.