தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு நியமனம் பெற்ற உறுப்பினர்களில் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களை பதவி விலகுமாறு அந்தக் கட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருட காலமே பதவி வகிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நியமன உறுப்பினர்களில் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு சார்பாக செயற்படும் உறுப்பினர்களை மட்டுமே பதவி விலகுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசி வழியாகவே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.