தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனை தற்காலிகமாக நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிய வருகிறது.
எனினும், கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கவில்லை.
மணிவண்ணனை தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மத்தியகுழுவில் தீர்மானிக்கப்பட்டு, இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஊடகங்களில் செய்தி வெளியான பின்னர், அந்த அறிவிப்பை வட்ஸ்அப் வழியாக கஜேந்திரகுமார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.