மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமான மகன்

1992ல் ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தவர் மணிரத்னம். அந்த படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதோடு, தொடர் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான ரகுமான், பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என்று இசையமைத்து இன்றைக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளராகி விட்டார்.

AR-Rahman-with-Son-Ameen-Rahman

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்த டைரக்டர் மணிரத்னம் அடுத்து தான் இயக்கும் படத்தில் அவரது மகன் அமீனையும் ஒரு பாடலை பாட வைத்து பின்னணி பாடகராக தனது படத்தில் அறிமுகம் செய்யப்போகிறாராம். இதற்கு முன்பு மகன் அமீனை கபுள் ரீட் ரீட் என்ற இந்தி படத்தில் ஒரு பாடலை பாட வைத்த ஏ.ஆர்.ரகுமான், இந்த முறை மணிரத்னம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழில் அவரை அறிமுகம் செய்கிறார்.

இதற்கு முன்பு ஏற்கனவே சில டைரக்டர்கள் தங்கள் படத்தில் பாட வேண்டிய சிறுவர் பாடல்களுக்கு அமீனை பாட வைக்குமாறு கேட்டபோது மறுத்த ரகுமான், இப்போது மணிரத்னம் சொன்னதால் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம். தன்னைப்போலவே மகனும் மணிரத்னம் என்ற ராசியான மோதிரக்கையினால் குட்டுப் படட்டுமே என்ற செண்டிமென்ட்தான் இதற்கு முக்கிய காரணமாம்.

Related Posts