மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து சரிவை சந்தித்துவந்த மணிரத்னத்திற்கு மீண்டும் பெரிய வெற்றியை இப்படம் தேடி கொடுத்திருக்கிறது.
வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் மணிரத்னம் தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இவர் அடுத்ததாக தமிழ், இந்தி என இரு மொழிகளில் படத்தை இயக்க இருக்கிறாராம். இதில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் இந்தியில் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ என இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்ததால் தனுஷுக்கு இந்தியில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இதன் காரணமாக தனுஷை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘சூதாடி’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் வேலைகள் முடிந்த பிறகு மணிரத்னம் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.