Ad Widget

மணநாளில் ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்கக் காரணமான பவுன்சர்கள் கைது

ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் ஹர்பஜன் சிங், கீதா பஸ்ரா திருமணம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தின் போது, வீட்டுக்கு வெளியே நடந்த வைபவத்தை அங்கு குழுமியிருந்த சில நிருபர்கள் தங்கள் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இதைப் பார்த்த பவுன்சர்கள் சிலர் நிருபர்களை தாக்கி, அவர்களது கேமராவையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.

harbajan-sing

இதனால் ஆத்திரமடைந்த நிருபர்கள் உடனடியாக அந்த இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதைக் கேள்விப்பட்டு வெளியே வந்த ஹர்பஜன் சிங் நிருபர்களிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து அவர்களின் தர்ணா முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார். பாபுல், குல்தீப், ரவி, நவ்ஜாத், ஆகிய 4 பவுன்சர்களை நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் தனது திருமண நிகழ்விற்கான வீடியோ உரிமையை குறிப்பிட்ட ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு விற்றுவிட்டதாகவும், அதனாலே வீடியோ எடுக்க நினைத்த கேமராமேன்கள் தாக்கப்பட்டு அவர்களின் கேமராவும் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Posts