மட்டக்களப்பு ஊறணியில், கடும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதந்த பஸ் வண்டி மீது இன்று பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த சிலரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறதது.
அதே நேரம், தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மாநாட்டு மண்டபத்திற்குள் நுழைந்த சிலர் மாநாட்டைக்குள் நுழைந்து குழப்பமும் விளைவிக்க முனைந்தனர். இருப்பினும் அவர்களை பொதுமக்கள் வெளியேற்றினர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தமது மாநாட்டைக் குழப்புவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலர் தமது மாநாட்டு மண்டபத்துக்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்த முனைந்ததாகவும் ஆனாலும் எவ்வித பாதிப்பும் இன்றி மாநாடு சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மாநாட்டு ஏற்பாடுகள் மட்டக்களப்பில் நடைபெறத் தொடங்கியதிலிருந்து துண்டுப்பிரசுரங்களும் சுவரொட்டிகளும்,கறுப்பு கொடிகளும், கறுப்பு பலூன்களும் கட்டப்பட்டும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.