மட்டுவில், சிவன்கோவில் வீதியில் நேற்று வாள்களுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 22 வயதான இரு இளைஞர்கள் என பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக தென்மராட்சியின் மட்டுவில் உள்ளிட்ட பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.