மட்டுவில் பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.

மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம் (வயது 58) என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Posts