மட்டுவில் தாக்குதல் சம்பவம் – மூவர் கைது

சாவகச்சேரி மட்டுவில் கிழக்கு பிரதேசத்திலுள்ள வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர், பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலையடுத்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தின்போது, தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts