மடுவில் யாத்திரிகர்களுக்கிடையில் மோதல்!

மடு திருத்தலத்தில் தங்கியிருந்த யாத்திரிகர்களுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கலாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில யாத்திரிகர்களுக்கிடையிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன், மோதல் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி இலக்கத்தை பலவந்தமாக கேட்டமையினால் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அத்துடன் மோதலில் ஈடுபட்ட சிலர் மது போதையில் காணப்பட்டதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பலரைக் கைது செய்திருப்பதாகவும் மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts