மக்கள் வங்கியின் யாழ்.பிரதான வீதிக் கிளை நாளை திறக்கும்!!

மக்கள் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கிளை நாளைக் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வாடிக்கையாளர் சேவைக்காக திறந்திருக்கும் என்று யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் அறிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் அத்தியாவசி சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் அவை ஊரடங்கு நடைமுறையில் உள்ள போதும் இயங்க முடியும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கிளை நாளைக் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வாடிக்கையாளர் சேவைக்காக திறந்திருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts