மக்கள் முழுமையமான அரசியல் பலத்தை தரும் பட்சத்தில் மேலும் பல மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் – டக்ளஸ் தேவானந்தா

மக்களை ஒருங்கிணைத்து கிராமங்களை மட்டுமல்லாது பிரதேசம், மாவட்டம் என மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதே எமது நோக்கமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

11805714_1602606243325678_157688343_n

நாவற்குழி அற்புத அன்னை சனசமூக நிலையத்தில் இன்றைய தினம் (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாம் பல்வேறுபட்ட அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தியுள்ளோம்.

அதனடிப்படையில் தான் மக்கள் முழுமையமான அரசியல் பலத்தை தரும் பட்சத்தில் மேலும் பல மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராகவிருக்கின்றோம்.
குறிப்பாக சுயதொழில் வாய்ப்பு, வேலைவாய்பபு உள்ளிட்ட விடயங்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளோம்.

குறிப்பாக மக்களை ஒருங்கிணைத்து அந்தந்த கிராமங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே எமது பிரதான நோக்கமென அவர் சுட்டிக்காட்டினார்.

கிராமங்களை மட்டுமன்றி பிரதேசம் மாவட்டம் என நாம் மக்கள் நலன்சார்ந்ததான திட்டங்களை வகுத்து முன்னேற்றுவது மட்டுமன்றி மக்களை ஒருங்கிணைத்து அபிவிருத்தியை மேம்படுத்துவNது எமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் குகேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சூசைமுத்து அலெக்ஸ்ஸாண்டர் சாள்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts