மக்கள் முன்னணி நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது! மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் செயலகத்திற்கு முன்னால் இன்று 24.4.2013 நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல் வழங்கியதாக எமது இணையத்தளத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது

எந்தப் போராட்டம் செய்வதானாலும் தமிழரசுக் கட்சி முன்னிலைப்படுதப்பட வேண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால் நிராககிக்கப்பட்டவர் எனவே நாங்கள் இதைவிட பெரிய போராட்டம் அறிவிக்கிறோம் அதற்குதான் நீங்கள் வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறியதாக அறிய முடிகிறது அதனால்தான் கஜேந்திரகுமார் அறிவித்த போராட்டத்தை முறியடிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஊடக காய் நகர்த்தலை நேற்று செய்து 29ஆம் திகதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள உதயன் பத்திரிகையில் இன்றைய தலைப்புச்செய்தியாக 29ஆம் திகதி போராட்டம் தொடர்பான செய்தி இடம்பெற்றுள்ளமையும் இன்றைய போராட்டம் குறித்த செய்தி மூடிமறைப்பு் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகச்பேச்சாளரான சுரேஸ்பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில் தமிழ்தேசிக்கூட்டமைப்பு இன்றைய போராட்டத்திற்கும் தமது ஆதரவினை தெரிவிப்பதாக கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போராட்டங்களை ஏற்பாடுசெய்யும் வேளைகளில் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் ஏட்டிக்குபோட்டியாக பிறிதொரு திகதியினை அறிவிப்பதை அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிகிறது

Related Posts