மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை

வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி, ஊரணி, காங்கேசன்துறை, பலாலி, தையிட்டி ஆகிய பகுதிகளில் தற்போது மக்கள் மீள்குடியேற்ற வேண்டும் என்று வலியுருத்தி இன்று யாழ் வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இவ்வழிபாடு வலிவடக்கு பிரதேச மீள்குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன் மயிலிட்டி, ஊரணி, காங்கேசன் துறை, பலாலி, தையிட்டி ஆகிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

இதில் மக்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் எந்தியும் சிறப்பான வழிபாட்டினை செய்து கொண்டனர்.

tellippalai-Poojai

Related Posts