மக்கள் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடைகளில் மிளகாய்த்தூள் முடிந்துவிட்டது நாடாளுமன்றத்தில் பெற்றுத்தர முடியுமா? என மக்கள் எம்மிடமே கேள்வி கேட்கின்றனர்.
மக்களின் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது. சபாநாயகருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட சகலரும் கடுமையாக தண்டிக்கபட வேண்டும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.