மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த ஒரு தீர்வையும் ஏற்க போவதில்லை ; சம்பந்தன்

மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேநேம் எமக்கு தேவையான சட்ட ரீதியான உள்ளடக்கங்கள் ஒரு தீர்வில் காணப்பட்டால் அதனை தமிழர்கள் இழக்க கூ்டாது எனவும் குறிப்பிட்டார்.

காலைக்கதிர் நாளிதழின் பிரசுரமும் ஆரம்ப விழாவும் நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புதிய அரசியல் சாசனத்தை ஒருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்து சேவையாற்ற வேண்டியது காலத்தின் அவசியம் எனவும் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள் என்ற பெயரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts