பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறைக்கப்படவில்லை என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று சமர்க்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்ட அவர் நாடெங்கும் 30,000 தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வடக்கில் 10 வருட காலமாக சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக இவர்கள் பாடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என வலியிறுத்தியிருந்தோம். இது தொடர்பாக விடயங்கள் உள்வாங்கப்படவில்லை. இது எமக்கு கவலை அளித்துள்ளது.
இதே போன்று நாடுமுழுவதும் 90 000 விதவைகள் இருந்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 000 ற்கு மேற்பட்டோர் இவ்வாறு இருக்கின்றனர். இவர்கள் தொடர்பாகவும் சில விடயங்களை முன்வைத்திருந்தோம்.என்றும் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.