மக்கள் உதவியை நாடிய மஹரகம வைத்தியசாலைக்கு சிறந்த பலன் கிட்டியது

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது.

இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த குறித்த வைத்தியசாலையின் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டியுள்ளது.

இதன்படி, 20 கோடி ரூபாய் இதுவரை மக்களால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வைத்தியசாலையின் இலக்கு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிக்க ஒருவர் சுமார் மூன்றரை கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்.

Related Posts