மக்கள் ஆர்வமாக வரலாற்றுக்கடமையில்! கையெழுத்து போராட்டத்தில்…

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான  திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்ற பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

தொடர்ந்து அனைத்து தரப்பினரிடமிருந்தும் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கில் முழுவீச்சுடன் செய்வதற்கான முன்னெடுப்புக்களில் குறித்த தரப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும்  தெரியவருகின்றது. இது பற்றி அவர்களால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடைபெற்றுவரும் கையெழுத்துப்போராட்டம் நாளை மேலும் பல பகுதிக்ளுக்கு விரிவு படுத்தப்படவுள்ளது.தொடர்ந்தும் யாழ் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இக்கையெழுத்து சேகரிப்பு நிலையம் தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை செயற்படும்.

இவை தவிர திருநெல்வேலி சந்தைப்பகுதியில் நாளை காலை 7 மணி முதல் 10 மணிவரையும்,
பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் முழுநாளும், பருத்தித்துறை நகரப்பகுதி மற்றும் சந்தைத்தொகுதியிலும் , நல்லூர் ஆலய முன்றல் (பருத்தித்துறைவீதி – செட்டித்திரு சந்திப்பகுதி ) ஆகிய இடங்களில் கையெழுத்து சேகரிப்பு நிலையங்கள் செயற்படும்.

மக்கள் அனைவரும் இக்கையெழுத்துப்போராட்டத்தில் இணைந்து உங்கள் பொறுப்பை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.இவை தவிர, கிராமிய அமைப்புகள் விளையாட்டுகழகங்கள், சனசமூக நிலையங்கள் ,மத நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இச்செயற்பாட்டுடன் தம்மை சுய ஆர்வத்துடன் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

கையெழுத்துப்படிவங்களினை 0212212530 என்ற அலுவலக  தொலைபேசி இலக்கத்தினூடு தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்  என குறிப்பிடப்பட்டுள்ளது

 

மேலும் தகவல்களுக்கு 

Related Posts