மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணைக்கு தான் மதிப்பளித்தது போல பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள கடிதத்தின் முழு தமிழ் வடிவம் இதோ..

கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களே!
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி
மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர்,

அன்புள்ள தலைவர் அவர்களே,

நீங்கள் அனுப்பிய 2015-08-12 திகதியிட்ட கடிதம் 2015-08-13 திகதி அன்று கிடைத்ததாக அறிவிக்கிறேன்.

அந்த கடிதத்தில் உள்ள வேறு தரப்புகளின் கருத்துக்கள் மூலம் உள்ள அடிப்படை அற்ற விமர்சனங்களை நிராகரித்து மறுக்கிறேன். 2015 பொதுத் தேர்தலை இலக்கு வைத்து உள்ள கருத்துக்கள்படி பாராளுமன்றில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் 2015-01-09 திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவு வந்து முடிவதற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியது மற்றும் சில தினங்களுக்குப் பின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சியை உங்களிடம் ஒப்படைத்தது உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் எடுத்த தீர்மானத்தின் பேரிலாகும்.

ஆனால் 2015 பெப்ரவரி மாதமாகும் போது கட்சியின் பெரும்பாலானவர்கள் மற்றும் மக்கள், மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருமாறு என்னை தூண்டியதை நான் நினைவுபடுத்துகிறேன். நான் 2015 ஜனவரி 9ம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி
மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆலோசகர்

Related Posts