மக்களை வேலைவாய்ப்பெனக்கூறி சுவிஸ்,கனடாவிற்கு அழைத்துச் செல்லவுள்ள தனியார் நிறுவனம்!!!

தனியார் நிறுவனம் ஒன்று அல்லைப்பிட்டி பகுதியில் 68 பேரை சுவிஸ் மற்றும் கனடா தேசங்களிற்கு வேலைவாய்ப்புக்கு எனத் தெரிவித்து அழைத்து செல்லவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் 2ஆம் வட்டாராம் பகுதியில் 68 பேர் சுவிஸ் . கனடா போன்ற தேசங்களிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.VNK buisness network என்ற தனியார் நிறுவனம் அப்பகுதி மக்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக கூறியுள்ளது.

இதற்கு ஆண்களிற்கு ஒரு இலட்சம் ரூபா அறவிடுவதுடன் பெண்களை இலவசமாக கூட்டி செல்வதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பி 68 பேர் தமது பெயர் விபரங்களை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த நபர்கள் வருகின்ற 8 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார்

எனினும் குறித்த பயணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts