வீதியால் சென்றுகொண்டிருந்த மக்களை அமைச்சர் ஒருவரின் வாகனம் மோதிய வீடியோ ஒன்று தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்டாரவளையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிரிவி பாதுகாப்பு கமராவில் பதிவான இந்த வீடியோ காட்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு கொளுத்தி வீதியில் கூட்டமாகச் சென்றபோது அந்தக் கூட்டத்திற்கு பின்னால் வந்த வேட்பாளர் செந்தில் தொண்டமானின் வாகனம் கூட்டத்தில் இருந்தவர்களை மோதிக் கொண்டு வேகமாகச் செல்வதை காணமுடிகிறது.
இவ்விபத்தில் ஒருவர் பலியானதோடு 34 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த செந்தில் தொண்டமான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.