மக்களை பாதிக்கும் வரி யோசனைகளுக்கு இடமளிக்கப்படாது!

மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு வரி யோசனையையும் செயற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர்கள் என்ன கூறினாலும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முடியாது என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பற்றி சிந்திக்காத பொருளாதார நிபுணர்கள் இருப்பின் அவர்கள் பணியை விட்டு நீங்கிச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related Posts