மக்களை ஏமாற்றுகின்றதா லிட்ரோ கேஸ் நிறுவனம்??

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று 9 ஆம் திகதி காலை சிவப்பு சீல் லேபில் ஒட்டப்பட்ட லிட்ரோ கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில், அந்த லேபிளை அகற்றியபோது, ​​சிவப்பு லேபிளுடன் பின்னால் பழைய வெள்ளை லேபிள் சுற்றி இருந்துள்ளது.

இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக பழைய எரிவாயு சிலிண்டரில் வெள்ளை லேபிளின் மேல் நிறுவனம் சிவப்பு லேபிளை ஒட்டியுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இன்று பொகவந்தலாவையில் உள்ள லிட்ரோ காஸ் முகவர்களுக்கு புதிய சிலிண்டர்களை லிட்ரோ நிறுவனம் இன்று விநியோகித்துள்ளது அத்துடன் பழைய கையிருப்புகளை வேறொரு நாளில் பெற்றுக்கொள்வதாக நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் பொகவந்தலாவையில் எரிவாயு விற்பனை மேலும் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts