மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எமது செயற்பாடுகள் தொடரும்- மாவை

இராணுவம் மற்றும் அநாவசியமற்ற தேவைகளுக்காக சுவீகரித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் எமது செயற்பாடு இருக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

mavai-vote

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (10) யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.

வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

சம்பூர் காணிகள் விடுவிப்பதற்கு எடுத்த நடவடிக்கையில் வெற்றியைக் கண்டுள்ளோம். தொடர்ந்தும் மக்களின் காணிகள் விடுவிப்புக்காக பாடுபடுவோம்.

இம்முறை அதிகளவான ஆசனங்களுடன் நாடாளுமன்றம் செல்வோம் என்ற நம்பிக்கையுள்ளதாக அவர் கூறினார்.

Related Posts