மக்களின் உதவியை நாடியுள்ள மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது.

இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த குறித்த வைத்தியசாலையின் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டியுள்ளது.

குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிக்க ஒருவர் சுமார் மூன்றரை கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்.

குறித்த நிதியுடன் இதுவரை கிடைக்கப் பெற்ற நிதி 11 கோடியைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை 077 070 10 10 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் நிதியளிக்க விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்குக்கு அதனை வைப்புச் செய்யலாம்.

Account Name – National Cancer Institute Maharagama
Account Number – 71275069
Bank – BOC Maharagama
Swift Code – BCEYLKLX

Related Posts