மக்களின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: மாதேவ் குமார்

Kumarமக்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று தான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாதேவ் குமார் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா யாழ். பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

‘ஈழத் தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைத்து இடதுசாரிகளும் கம்யூனிஸ்ட்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளில் கட்சி முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகளை களைந்து எறிந்து விட்டு மக்களின் தீர்வுத் திட்டம் குறித்து யோசிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடு காரணமாக ஒவ்வொரு கட்சிகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனைக்குரிய விடயமாகும்.

இனமென்று பார்க்கும்போது, இனத்தின் தனித்துவத்தினையும் கலாசாரத்தினையும் அங்கீகரிக்க வேண்டும். அதனால், அதிகாரங்கள் பகிரப்படும் ஒவ்வொரு இனமும் சுயகௌரவத்துடன் வாழ வேண்டும். அதற்கு சகோதரத்துவ உணர்வினை ஏற்படுத்தி அவற்றினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது துப்பாக்கிப் பிரயோகங்கள் அரசியலில் அங்கீகாரம் பிடித்துள்ளது. துப்பாக்கி அங்கீகாரத்தினால் என்ன செய்யப்பட்டார்கள்? தேர்தல் காலம் வரும்போது, மக்களிடம் வாக்குகள் பெற்றுக்கொள்வதற்கு சிந்திக்கின்றோம். ஆனால், மக்களின் மனங்களை வெல்வதற்கு சிந்திக்கவில்லை.

மக்களை அணிதிரட்டி இலக்கினை அடைய முடியும். அந்த இலக்கினை அடைவதற்கு எமது பாதையினை தவறாக எடுத்துக் கொண்டால் எமத மக்களின் அழிவினை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். அந்த வகையில், மக்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு சகோதரத்துவ உணர்வுடன் செயற்பட வேண்டும்’ என்றார்.

Related Posts