மக்­களை வாழ வைக்­க­வேண்டும் என்று உதித்த சம­யங்­கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­து­வதில் இன்பம் காண்­கின்­ற­ன – மன்னார் ஆயர்

mannar-ayarஅன்பே கடவுள் என்று எல்லா மதங்­களும் எமக்கு கற்­று­தரும் இந்­த­வே­ளையில் ஊண்­இ­யல்­பு­க­ளுக்கு அடி­மை­யா­காது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­தி இன்பம் காண்­ப­தாலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி காண­து­டிப்­பதாலும் ஒவ்­வொ­ரு­வரும் அமைதி இழந்து காணப்­ப­டு­கின்­றனர் என மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் புதன் கிழமை மன்னார் பொது­வி­ளை­யாட்டு மைதான முன்­றலில் தென் ­ப­கு­தி­யி­லுள்ள அளுத்­கம பேரு­வளைஇ தர்கா நகர் போன்ற இடங்­களில் முஸ்லிம் மக்கள் மீது கட்­ட­விழ்க்­கப்­பட்­டி­ருக்கும் வன்­செ­யலைக் கண்­டித்து இவர்­க­ளுக்­கான சர்­வ­மத பிரார்த்­தனை இடம்­பெற்­றது.

இந் நிகழ்வில் கிறிஸ்­தவம், முஸ்லிம், இந்து, பௌத்தம் மற்றும் திருச்­ச­பையை சாராத கிறிஸ்­தவ மதத்­த­லை­வர்­களின் சர்வ மத பிரார்த்­த­னை­களும் இடம்பெற்­றன.

இதைத்­தொ­டர்ந்து மன்னார் ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தற்­பொ­ழுது நாட்டில் நிலவும் இந்த விரோத செயல்கள் நிறுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும். இங்கு இருக்­கின்ற எல்லா இனங்­களும் ஒரு மனப்­பட்டு நல்ல சிந்­த­னை­யுடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்­த­னை­யுடன் வாழ்க்கை முறையை கண்­டு­கொள்ள வேண்டும்.

பேரு­வளைப் பகு­தியில் கொல்லப்­பட்­ட­வர்கள் உற்றார் உற­வி­னர்­க­ளுக்­காக அனு­தாபப்­ப­டு­கின்ற இந்த நேரத்தில் இப்­ப­டிப்­பட்ட காரி­யங்கள் எம் மத்­தியில் சமய வாதி­களை கொல்­வ­தற்கு எடுத்­தி­ருக்கும் முயற்­சி­க­ளுடன் இதற்­குமேல் இனி என்ன இருக்­கின்­றது என்­பது எமக்குத் தெரி­யாது.

ஆகவே மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­து­வதிலும் இன்பம் காண்­ப­திலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி கொள்­ளலாம் என்று கோட்­டைகள் கட்­டு­வதை இக்­கா­லத்தில் நாம் பார்க்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

ஆகவே சமயம் என்றால் என்ன எல்லா சம­யங்­க­ளுக்கும் பொது­வாக இருப்­பது என்னஎன்ற உண்­மையை தெரிந்து கொண்டு வெவ்வேறு சம­யங்­க­ளி­னூ­டாக இறைவன் மக்­களை தம்­மிடம் வரும்­படி அழைத்­துள்ளார்.

ஆகவே நாம் ஒவ்­வொரு சம­யத்­தையும் மதிப்­ப­த­னூ­டாக மனி­தரின் அடிப்­படை உரிமை, சமூக உரிமை அத்­துடன் சமய உரி­மையின் ஊடாக ஒரு மனிதன் எப்­படி வாழ வேண்டும் என்று அவர்கள் தெரிந்து கொள்­வ­தற்கு உத­வி­யாக இருக்­க­வேண்டும் என்­பதை விடுத்து மனி­தர்­க­ளுக்கு உபத்­திரம் ஊண்­ இ­யல்பு காரி­யங்­க­ளுக்கு அடி­மைப்­பட்டு இப்­ப­டிப்­பட்ட காரி­யங்­களை செய்­வது வெட்­கத்­துக்­கு­ரிய விட­ய­மாகும்.

ஆகவே கட­வுளால் ஆட்­கொள்­ளப்­ப­டு­ப­வர்கள் கட­வுளின் ஆவிக்கு தங்களை அர்ப்­ப­ணிப்­ப­வர்கள் வாழ்­விலே உண்­மை­யான அன்பு இருக்க வேண்டும் அப்­பொ­ழுது அங்கு அமைதி இருக்கும் சமா­தானம் இருக்கும்.

அத்­துடன் எல்லா வித­மான வளங்­களும் இருக்கும் பிற­ருடன் பகிர்ந்து கொள்­வ­தற்கும் ஆர்வம் காணப்­படும். ஆகவே இந்­த ­வே­ளையிலே எல்லா சம­யங்­க­ளுக்கும் அடிப்­ப­டை­யாக இருப்­பது அன்பே கடவுள் அன்பு கொண்­டுள்­ளவன் கட­வு­ளுடன் இணைந்­தி­ருக்­கின்றான் கட­வுளும் அவ­னுடன் இணைந்­தி­ருக்­கிறார் என்­ப­துதான் ஒவ்­வொரு சம­யத்­தி­னதும் சார­ாம்­ச­மாகும்.

கிறிஸ்­த­வத்­திலே பழைய புதிய ஏற்­பா­டுகள் என ஒரு பெரிய 72 புத்­த­கங்கள் இருக்­கின்­றன அவை கூறு­வது என்ன அன்பே கடவுள் என்­றுதான் சொல்­லு­கின்­றது. அதா­வது கடவுள் நம்­மோடு இருக்­கின்றார் நாமும் கட­வு­ளுடன் இருக்­கின்றோம்.

நாம் கட­வுளை கண்­ட­தில்லை ஆனால் ஒருவர் மற்­றவர் மீது அன்பு கொண்­டி­ருந்தால் கடவுள் நம் மத்­தியில் இருக்­கின்றார். இதுதான் எமக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் படிப்­பி­னைகள். இந்த அடிப்­ப­டை­யில்தான் மற்­றை­வைகள் சொல்­லப்­ப­டு­கி­றது. இத­னால்தான் ஒவ்­வொரு சம­யமும் இவற்றை ஆணி­வே­ராக கொண்­டுள்­ளது. இவ்­வா­றான அன்பு எல்லா மதங்­க­ளிலும் மலர வேண்டும். அதை­வி­டுத்து கல­வ­ரங்கள் நிகழ்­கின்­ற­போது இறை­வனை நோக்கி செபிக்­காது மனித மாண்பை மதிக்­காது இருக்­காது இறை­வனை நோக்கி குரல் கொடுக்­கவே இந்நாள் எமக்கு அறை­கூவல் விடுக்­கின்­றது. எல்லா மக்­களும் வாழ வேண்டும் எல்லா மக்­களும் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்டும். அன்பு இல்­லையேல் அங்கு அமைதி இருக்­காது சண்­டையும் சச்­ச­ர­வும்தான் உரு­வெ­டுத்­தி­ருக்கும். அன்பு செய்யும் சக்­தியை இறைவன் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் கொடுத்­தி­ருக்­கின்றார்.

இறைவன் தனது சாய­லாக மனி­தனை படைத்­தி­ருக்கின்றார் என்றால் அவரின் விலை­ம­திப்­பில்­லாத அன்பின் நிமித்­தமே இவற்றை செய்­துள்ளார் என்று நாம் சிந்­திக்க வேண்டும். கடவுள் மனி­த­னுக்­காக எல்­லா­வற்­றையும் படைத்த பின் நல்­லது எனக் கண்டு மனிதன் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்டும் என விரும்­பினார். ஆனால் மனி­தரின் பாவம் கீழ்­ப­டி­யாமை தானே சட்­டத்தை உரு­வாக்கி தான் தோன்­றித்­த­ன­மாக வாழ்­வ­தா­லேயே இன்று தீமை பெரு­கிக் ­கொண்டு வரு­கி­றது.

ஆகவே கடவுள் தீமைக்கு ஊற்­றல்ல நன்­மைக்கே ஊற்று ஆகவே இறை­வனை நாம் ஒவ்­வொ­ரு­வரும் எம் இத­யத்தில் இருத்திக் கொள்­ள­வேண்டும். சம­யத்­துக்கு எதி­ரான செயல்­பாட்டில் இறங்­கும்­போது அது அவர்­களின் சம­யத்தை இல்­லா­தொ­ழிக்கும் செயல்­பா­டா­கவே அமையும். ஆகவே எல்லா சம­யத்­த­வரும் ஒவ்­வொரு சம­யத்­த­வ­ரையும் மதித்து வாழ பழ­கிக்­கொள்ள வேண்டும்.

உட­லுக்கு உணவு எப்­படி அவ­சி­யமோ இதே­போன்று அன்பு எமது வாழ்­வுக்கு ஓர் உண­வாக அமைய வேண்டும். எமது வாழ்க்கை மிருக வாழ்க்­கை­யாக இருக்கக் கூடாது மற்­ற­வர்­க­ளுக்­காக நாம் வாழ கற்­றுக்­கொள்ள வேண்டும் என தெரி­வித்தார்.

Related Posts