மகேஸ்வரன் குடும்பத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள்: துவரகேஸ்வரன் ஆதங்கம்

மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும், அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும், அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் உண்மையற்ற கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. என் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன .

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருடைய சட்டத்தரணிகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறே நீதவான் உத்தரவிட்டிருக்கிறார்.

என் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கணம் வரை படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்ப அனுசரணையாளராக நான் இருந்து வருகிறேன்.

என்னுடைய கைகளில் இந்த வழக்கு வந்த காரணத்தால் தான் குற்றவாளிகள் கடந்த இரண்டாண்டு காலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இல்லாவிடில் குற்றவாளிகள் எப்போதோ தப்பித்தித்திருப்பார்கள் என்பதையும் நான் பகிரங்கமாகக் கூறிவைக்க விரும்புகிறேன்.

இந்த வழக்கைத் திசை திருப்புவதற்கும், எங்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் சேறு புசுவதற்கு ஏற்படுத்துவதற்கும் நிலத்திலும், புலத்திலும் சிலர் செயற்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Posts