மகேஸ்வரனின் சகோதரன் வேட்பாளராக நியமிப்பு: ஐ.தே.க.

UNPஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த தியாகராசா மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ள நிலையில், வேட்பாளர் தெரிவு தற்போது நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேட்பாளர் தெரிவில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் நடைபெறும் கலந்துரையாடலின்போது, இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு ஏனைய வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts