மகி நூடில்ஸ் விற்பனைக்குத் தடை

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மகி நூடில்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புதுடில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் மகி நூடில்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை பலர் வைத்தனர். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது ஆய்வின் போது தெரியவந்ததை தொடர்ந்து, மகி நூடில்ஸுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

விற்பனையில் உள்ள அனைத்து மகி நூடில்ஸ் பைக்கெட்டுக்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts