மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் நோர்வே முதலிடம்!

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று (20) அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன்படி, மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.

இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122 ஆவது இடத்தையும் அமெரிக்கா 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

அந்த வகையில், கடந்த வருடம் நான்காவது இடத்தை பிடித்திருந்த நோர்வே நாடு தற்போது முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலாவது இடத்தில் இருந்த டென்மார்க் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தை நோர்வே பிடித்துக் கொண்ட விடயம் தெரியவந்துள்ளது.

முறையே, ஐஸ்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் 3 தொடக்கம் 10 ஆம் இடம் வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Posts