மகிந்த ஆதரவு அணியினரின் பேரணியின் இரண்டாம் நாள் ஆரம்பமாகியது

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது.

Untitled-1

இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது.

“மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

இதேவேளை, வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Posts