மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தல், வாக்களிப்பு நிலையம் மூடப்பட்டது!!

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தொந்தரவு செய்தமையால் தபால்மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

மீதொட்டுமுல்லை, இலங்கை போக்குவரத்து சபை கட்டடத்தில் இன்று இயங்கிய தபால்மூல வாக்களிப்பு நிலையமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கென வந்த ஊழியர்களை, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலர் மகிந்தவுக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தியதில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இதற்கு காரணம் என தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Posts