நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட்ட ஐவரையும் 14 நாட்கள் (எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் நிதி மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
- Thursday
- April 10th, 2025