மகிந்த ராஜபக்சவின் தோல்வியை தாங்க முடியாமல் மாரடைபினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று களனியில் இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இரு பிள்ளைகளின் தந்தையான நிமல்சிரி அபேவிக்ரம என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொது வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவதை தெரிந்துகொண்ட இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.