மகாத்மா காந்தியின் 65 ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.வட இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன்படி, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் தலைவர் தி.இராசநாயகம் விரிவுரையாளர் மெய்யியல் துறை யாழ். பல்கலைக்கழகத்தை சேர்ந்த ந.சிவகரன் மற்றும் இலங்கை காந்திசேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கான நிகழ்வுகள் அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் யாழ்.கிளைத் தலைவர் கா.கார்த்திகேசு தலைமையில் நடைபெற்றதுடன் அஞ்சலிக் கூட்டமும் காந்திசேவா சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.